’ஜனநாயகத்திற்கு மோசமானது’ பேஸ்புக் மீது ராகுல் காந்தி தாக்கு
பாஜகவுக்கு சலுகை விலை அளித்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டது.
புதுடெல்லி,
பிரபல சர்வதேச ஊடக நிறுவனங்களான அல்ஜெசீரா மற்றும் தி ரிப்போர்ட்டஸ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட செய்தி, இந்திய அரசியல் வட்டாரத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக விளம்பரம் செய்ய பிற கட்சிகளை காட்டிலும் பாஜகவுக்கு சலுகை விலை அளித்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டது.
இதைக் சுட்டிக்காடி, மக்களவையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய அரசை மிகக்கடுமையாக சாடினார். இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “ ஜனநாயகத்திற்கு மிக மோசமானது” எனப்பதிவிட்டதோடு, அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story