அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 March 2022 4:38 PM IST (Updated: 16 March 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

கிழக்கு இந்தியாவில் அதீத வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தெற்கு ராஜஸ்தான், சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் கொங்கன் பகுதி ஆகிய பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. மேலும், குஜராத்-ராஜஸ்தான் மற்றும் ஒடிசா வரை, வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. அந்த பகுதிகளில் நாளை முதல் வெப்பத்தின் தீவிரம் குறையும் மற்றும் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story