ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் தனது கட்சியை இணைக்க முடிவு - சரத் யாதவ்
தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் இணைக்க சரத் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்னா,
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவராக இருந்த சரத்யாதவ், முதல்-மந்திரி நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகி லோக்தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கினார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில்,
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எனது உடல் நலம் கருதி லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சியை வரும் 20-ம் தேதி லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்.
இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பாஜக எல்லா நிலைகளில் தோல்வி அடைந்துள்ளது. பாஜகவுக்கு மாற்றாக வலுவான எதிர் கட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நேரமும் நெருங்கி வருகிறது என்றார்.
Related Tags :
Next Story