ரஷியா-உக்ரைன் போரால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் - மத்திய மந்திரி தகவல்


ரஷியா-உக்ரைன் போரால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 17 March 2022 2:18 AM IST (Updated: 17 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

போர் காரணமாக இந்த பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

புதுடெல்லி, 

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரஷியா-உக்ரைன் போரால் இந்தியாவின் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் அளித்த பதில் வருமாறு:-

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் மருந்து பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், இரும்பு, உருக்கு, தேயிலை, ரசாயனங்கள், பீங்கான் பொருட்கள், வேர்க்கடலை ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

போர் காரணமாக இந்த பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போர் முடிந்த பிறகுதான் பாதிப்பு துல்லியமாக தெரியும்.

உலக வர்த்தகத்தில் 25 சதவீத கோதுமையை ரஷியாவும், உக்ரைனும் ஏற்றுமதி செய்து வருகின்றன. இப்போது அங்கிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாதநிலை இருப்பதால், இந்தியா அதிகமான கோதுமையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story