ஹிஜாப் விவகாரத்தில் மேல் முறையீடு: மனுவை விசாரிப்பது குறித்து ஹோலி விடுமுறைக்கு பின் முடிவு
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது குறித்து ஹோலி விடுமுறைக்கு பின் முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.
ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் நிகழ்வு அல்ல. குரானில் ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தப்படவில்லை. சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மாணவி நிபா நாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே முறையிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக வேறு சிலரும் முறையிட்டுள்ளனர். சிறிது அவகாசம் அளியுங்கள். ஹோலி பண்டிகை விடுமுறைக்குப்பிறகு மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story