மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் அவதி
மத்திய பிரதேசத்தின் 9 மாவட்டக்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பைவிட அதிகரித்து கானப்படுகிறது.
அதிகரிக்கும் வெப்பநிலையால், அனல் காற்று வீசுவதால், மக்கள் அவதியுறுகின்றனர். அதிகபட்சமாக நர்மதாபுரத்தில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியசாக பதிவானது. மேலும், தார், ரத்லம் மற்றும் கர்கோன் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து கானப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்து வறண்ட மேற்குக் காற்று மத்திய பிரதேசத்தை நோக்கி வீசுவதால், வெப்பநிலையானது அதிகரித்து கானப்படுகிறது என்று இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story