கிரிக்கெட் விளையாட்டின் போது வெடித்த மோதல் - முதியவர் அடித்துக்கொலை
கிரிக்கெட் விளையாட்டின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டம் சண்டல்பூர் என்ற கிராமத்தில் உள்ள சில இளைஞர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கிரிக்கெட் விளையாட்டில் அந்த கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இரு தரப்பு பிரச்சினையாக வெடித்தது.
இதில், இரு தரப்பை சேர்ந்த கிராம மக்களும் கூர்மையான ஆயுதங்களை ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். இந்த மோதலில் 65 வயது நிரம்பிய முதியவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மோதல் நடந்த கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சியோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story