டெல்லி சாலை விபத்து: பலி 2 ஆக உயர்வு; கல்லூரி மாணவர் கைது


டெல்லி சாலை விபத்து:  பலி 2 ஆக உயர்வு; கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 2:37 PM IST (Updated: 19 March 2022 2:37 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஆட்டோ ரிக்சா மீது கார் மோதிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.





புதுடெல்லி,


டெல்லியின் பாபா பண்டா சிங் பகதூர் பறக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது.  இதன்பின்பு மற்றொரு கார் மீதும் மோதியது.

இந்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஒரே குடும்பத்தினை சேர்ந்த பெற்றோர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.  ஆட்டோ ஓட்டுனர் வாகர் ஆலம் மற்றும் ஜனக் பட், அவரது மனைவி கீதா பட் மற்றும் 18, 13 வயதுடைய அவர்களின் இரு மகன்கள் மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 2வது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளான்.  அந்த பெண்ணுக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.  விபத்து ஏற்படுத்தி தப்பியோடியவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்துள்ளது.  அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அந்த மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story