லக்னோவில் போலீஸ்காரரை செருப்பால் அடித்த பெண்! வைரல் வீடியோ


லக்னோவில் போலீஸ்காரரை செருப்பால் அடித்த பெண்! வைரல் வீடியோ
x
தினத்தந்தி 19 March 2022 7:07 PM IST (Updated: 19 March 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் ஒருவருக்கும் பெண் பயணி ஒருவருக்கும் இடையே மூண்ட வாக்குவாதம் காவலரை செருப்பால் அடிக்கும் அளவுக்கு சண்டையில் முடிந்துள்ளது.

லக்னோ,

லக்னோவில் உள்ள ரெயில் நிலையத்தில் போலீஸ் ஒருவருக்கும் பெண் பயணி ஒருவருக்கும் இடையே மூண்ட வாக்குவாதம் காவலரை செருப்பால் அடிக்கும் அளவுக்கு சண்டையில் முடிந்துள்ளது.

இந்த சம்பவம் லக்னோவில் உள்ள சார் பாக் ரெயில் நிலையத்தில் நடந்துள்ளது. அந்த பெண் தன்னிடம் போலீஸ்காரர் தவறாக நடந்து கொண்டதாக கூறி, அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை செல்போனில் படம்பிடித்தவர்கள் அந்த  வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Next Story