இலங்கை அதிபருடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா சந்திப்பு


இலங்கை அதிபருடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா சந்திப்பு
x
தினத்தந்தி 19 March 2022 7:38 PM IST (Updated: 19 March 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

கொழும்பு,

இலங்கையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிய நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

இதனையொட்டி பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய்ஷா இலங்கை சென்றுள்ளார். இந்த நிலையில் அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை விளையாடுத்துறை மந்திரி நமல் ராஜபக்சே உடன் இருந்தார். 

Next Story