இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் நிறுவனங்கள் முன் வர வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வந்தார் .டெல்லி வந்த கிஷிடோவை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடியை சந்திக்க புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு ஜப்பான் பிரதமர் விரைந்தார்.அவரை, பிரதமர் மோடி வாசலில் சென்று வரவேற்றார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இருநாட்டு பிரதமர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரு தலைவர்களும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜப்பான் தனது முதலீட்டை உயர்த்தும். பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஜப்பானும் புரிந்து கொண்டுள்ளன.
ஜப்பான் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயார் . இந்தியாவில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளன ” என்றார்.
Related Tags :
Next Story