அரியானா: தேசிய பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
குருகிராமில் தேசிய பாதுகாப்பு படையின் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குருகிராம்,
அரியானா மாநிலம் மானேசரில் உள்ள என்எஸ்ஜி முகாமில் தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) தலைமைக் காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் விக்ரம் என்று அடையாளம் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. கணவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்த மனைவி அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலை செய்துகொண்டவரிடம் இருந்து ஓர் முழுமை பெறாத கடிதம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story