உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பூசாரி அடித்துக்கொலை


உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பூசாரி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 March 2022 1:37 AM IST (Updated: 20 March 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டம் தோகத் பகுதியில் பூமியா கோவில் உள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டம் தோகத் பகுதியில் பூமியா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாதுலால் கிரி என்பவர் பூசாரியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு சென்ற சில விவசாயிகள் சாதுலால் கிரியை அழைத்தனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பூசாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பக்தர்களிடம் காணிக்கை வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் பூசாரி அடித்து கொல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story