மோசமான வானிலையால் அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து
காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
புதுடெல்லி,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக வலுவடையும் என்று தெரிவித்தது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அசானி புயல் காரணமாக அந்தமானில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story