ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: சிவசேனா நிராகரிப்பு


ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: சிவசேனா நிராகரிப்பு
x
தினத்தந்தி 20 March 2022 9:44 PM IST (Updated: 20 March 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பாஜகவின் ‘பி’ டீம், எனவே அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

ஐதராபாத் எம்.பி ஓவைசியின்  ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சஞ்செய் ராவத் கூறுகையில், “ 

எம் .ஐ .எம் கட்சி பாஜகவின் 'பி' டீம் அதனால் ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்  என்று மாவட்ட செயலாளர்களுடான சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே உறுதிபடக்கூறியுள்ளார்.  

சத்ரபதி சிவாஜி, சம்பாஜி மகாராஜை பின்தொடரும் எவரும் அந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார்கள். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகள் அடங்கிய கூட்டணி  மராட்டியத்தை ஆட்சி செய்து வருகிறது. நாங்கள் ஏன் 3-வதாக இன்னொரு கட்சியை சேர்க்க வேண்டும்” என்றார். 


Next Story