எத்தனால் உற்பத்தியை பெருக்குங்கள் ஆலைகளுக்கு நிதின் கட்காரி அறிவுரை


எத்தனால் உற்பத்தியை பெருக்குங்கள் ஆலைகளுக்கு நிதின் கட்காரி அறிவுரை
x
தினத்தந்தி 21 March 2022 5:48 AM IST (Updated: 21 March 2022 5:48 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை பெருக்குமாறு சர்க்கரை ஆலைகளை நிதின் கட்காரி கேட்டுக்கொண்டார்.

மும்பை, 

மும்பையில், சர்க்கரை மற்றும் எத்தனால் தொடர்பான கருத்தரங்கம் நடைெபற்றது. அதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

நமது நாடு, அரிசி, சோளம், சர்க்கரை ஆகியவற்றை உபரியாக கொண்ட நாடாக உள்ளது. எனவே, சர்க்கரையை தற்போதைய அளவை விட அதிகமாக உற்பத்தி செய்தால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்ைத சந்திக்க ேவண்டி வரும்.

சர்க்கரை ஆலைகள் நீடித்த வளர்ச்சியை காண வேண்டுமானால் சர்க்கரை உற்பத்தியை குறைத்துக்கொண்டு, கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதை அதிகரிக்க வேண்டும்.

எத்தனால் என்பது பசுமையான, சுத்தமான எரிபொருள். தற்போது, 465 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து வருகிறோம்.

இன்னும் 5 ஆண்டுகளில், வாகனங்களில் எத்தனாலுக்கு உகந்த என்ஜின் பொருத்தப்பட்டு விட்டால், எத்தனாலின் தேவை 4 ஆயிரம் கோடி லிட்டராக உயர்ந்து விடும். எனவே, சர்க்கரையையே உற்பத்தி செய்து கொண்டிருந்தால், நஷ்டம்தான் ஏற்படும்.

எத்தனால் விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விசேஷ என்ஜின் பொருத்திய கார், ஆட்டோ, ஸ்கூட்டர்கள் அங்கு எத்தனால் நிரப்பிக் கொள்ளலாம்.

எத்தனால் உற்பத்தி செய்யும் சர்க்கரை ஆலைகளும் தங்கள் வளாகத்தில் எத்தனால் விற்பனை நிலையத்தை திறக்கலாம். அங்கும் வாகனங்கள் எத்தனால் நிரப்பிக்கொண்டால், அதன் பயன்பாடு அதிகரித்து, காற்று மாசு குறையும்.

கிராமங்களில் வேலைவாய்ப்பு பெருகும். மொத்தத்தில், எத்தனாலுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story