ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது
நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தடைபட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
ஸ்ரீநகர்,
நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தடைபட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 270- கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், நேற்று ராம்பன் என்ற மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சுமார் 15 மணி நேரம் இந்த சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனரக வாகனங்களும் நடு வழியில் சிக்கி கொண்டன. இந்த நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட தடைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று வாகனப் போக்குவரத்து சீராகியுள்ளது.
Related Tags :
Next Story