பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானை நேரில் சந்தித்து சரண்ஜித் சிங் சன்னி வாழ்த்து..!


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 21 March 2022 4:09 PM IST (Updated: 21 March 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானை நேரில் சந்தித்து சரண்ஜித் சிங் சன்னி வாழ்த்து தெரிவித்தார்.

சண்டிகர்,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக பகவந்த் மான் கடந்த 16-ந்தேதி பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்றார். மேலும்10 மந்திரிகள் அடங்கிய பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை 19-ந்தேதி பதவியேற்றது.

இந்த நிலையில் பஞ்சாபின் முன்னாள் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத்தின் புதிய முதல் மந்திரி பகவந்த் மானை இன்று நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சரண்ஜித் சிங் சன்னி, 'பஞ்சாப் மக்களின் தீர்ப்பை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான், வெற்றிக்காக வாழ்த்துகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story