18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி? மத்திய அரசு பரிசீலனை


18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி? மத்திய அரசு பரிசீலனை
x

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையாக இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாடுகளுக்கு செல்வோர் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. 

இந்த நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், எந்த வயதினராக இருந்தாலும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அவர்கள்இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்.அப்படியிருக்கையில், இதுவரை 2.17 கோடி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

15-18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது

அதே போல, தற்போது, 12-14 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளியை குறைத்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story