இந்தியாவில் இருந்து ஒமைக்ரான் முழுமையாக ஒழியவில்லை - மத்திய அரசு
உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா 23 மடங்கு சிறப்பாகவே செயல்பட்டு ஒமைக்ரான் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-
உலகில் 99 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியா 145 நாள்களில் 2.5 கோடி தடுப்பூசிகளை செலுத்தியது. இதுவரை நாடு முழுவதும் 181 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்குமே கியு.ஆர். பட்டைகள் அடங்கிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் தொழில்நுட்பத்துடன் மனித வளத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி முழுமையாக பணியாற்றினோம்.
ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழியவில்லை. உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா 23 மடங்கு சிறப்பாகவே செயல்பட்டு ஒமைக்ரான் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால் பலரின் மதிப்புமிக்க வாழ்க்கை காக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story