மராட்டியம்: 2 டன் எடை கொண்ட திராட்சையால் கணபதிக்கு அலங்காரம்


மராட்டியம்:  2 டன் எடை கொண்ட திராட்சையால் கணபதிக்கு அலங்காரம்
x
தினத்தந்தி 22 March 2022 6:26 AM IST (Updated: 22 March 2022 6:26 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சங்கடாகர சதுர்த்தியை முன்னிட்டு 2 டன் எடை கொண்ட திராட்சையால் கணபதிக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.


புனே,


மராட்டியத்தின் புனே நகரில் உள்ள ஸ்ரீமந்த் தகதுசேத் ஹல்வாய் கணபதி கோவிலில் சங்கடாகர சதுர்த்தி தினம் அனுசரிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு கோவிலில் உள்ள கணபதிக்கு 2 டன் எடை கொண்ட திராட்சையால் அலங்காரம் செய்யப்பட்டது.  கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன.

இதுதவிர, ஆப்பிள் போன்ற வேறு சில பழங்களும், பூக்களும் கணபதிக்கு படைக்கப்பட்டன.  இதற்காக நாசிக் நகரில் உள்ள விவசாயிகள் திராட்சைகளை வழங்கி உள்ளனர்.  கணபதிக்கு அலங்காரம் செய்யும் பணிகளுக்கு உதவியாகவும் அவர்கள் இருந்துள்ளனர்.  இதன்பின் கணபதிக்கு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  இதுபற்றி அலங்கார வேலைப்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கூறும்போது, கணபதிக்கு திராட்சைகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.  இந்த திராட்சைகள் பின்னர் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மருத்துவமனைககளுக்கு பிரசாதம் ஆக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


Next Story