தமிழக அரசின் திட்டத்தைப் போல் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குமா? - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
தொழில்முறை கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர் பாலு, சமீபத்தில் தமிழக அரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது எனவும், இதே போல் நாடு முழுவதும் தொழில்முறை படிப்புகளை மேற்கொள்ளக் கூடிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு உதவித்தொகை அல்லது நிதி உதவி வழங்கும் திட்டம் ஏதேனும் மத்திய அரசிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி நாராயணசாமி, மாநில அரசுகள் தங்கள் சொந்த ஸ்காலர்ஷிப் திட்டங்களை வைத்துள்ளதாகவும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஒவ்வொரு விதமான ஸ்காலர்ஷிப் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசை பொறுத்தவரை மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி உதவி ஸ்காலர்ஷிப் குறித்து பொதுவான கொள்கைகள் இருப்பதாக மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story