இனிமேல் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறை செயல்படுத்தப்படும் - மந்திரி நிதின் கட்காரி தகவல்


இனிமேல் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறை செயல்படுத்தப்படும் - மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 22 March 2022 5:56 PM IST (Updated: 22 March 2022 5:56 PM IST)
t-max-icont-min-icon

தற்போது, 60 கி.மீ தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அகற்றப்படும் என்று நிதின் கட்காரி தெரிவித்தார். .

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசினார். 

அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது,

“தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது. 

தற்போது, 60 கி.மீ தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அகற்றப்படும். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ்களை வழங்க உள்ளோம்.”

இந்த தகவலை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிதின் கட்காரி தெரிவித்தார். 

Next Story