உ.பி.யில் காங்கிரஸ் தோல்வியால் பிரியங்கா காந்தி பதவி விலக கோரிக்கை
உ.பி.யில் காங்கிரஸ் தோல்வியால் பிரியங்கா காந்தி பதவி விலக கோரிக்கை எழுந்துள்ளது.
லக்னோ,
உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த மேலிடம், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லுவை பதவி விலக உத்தரவிட்டது. அவரும் பதவி விலகி உள்ளார்.
இந்த நிலையில் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியும் பதவி விலக வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜீஷன் ஹைதர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர், “2012 தேர்தல் தோல்வியைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவும், பொறுப்பாளர் திக் விஜய் சிங்கும் பதவி விலகினர். 2017 தேர்தல் தோல்வியை அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பரும், பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் பதவி விலகினர். அந்த வழக்கப்படி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு இப்போது பதவி விலகி உள்ள நிலையில், பிரியங்காவும் மாநில பொறுப்பாளர் பதவியை விட்டு விலக வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
இது உ.பி. காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story