மின்சார வாகனங்களின் விலை 2 ஆண்டுகளில் குறைந்துவிடும் - மத்திய அரசு தகவல்
பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை 2 ஆண்டுகளில் குறைந்துவிடும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில், நேற்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கழிவுநீரை சுத்திகரித்து பசுமையான ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் தங்கள் மாவட்டங்களில் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும். இது மலிவான மாற்று எரிபொருளாக இருக்கும். ஹைட்ரஜன் எரிபொருள் புழக்கத்துக்கு வந்து விட்டால், இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக மின்சார கார், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றின் விலை குறைந்து விடும். லித்தியம் அயன் பேட்டரி விலை குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story