பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க உத்தரவு
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் வாயிலாக நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ஜூன் மாதத்தில் முதல் கட்ட கலந்தாய்வை தொடங்கி, ஜூலை 20 அல்லது அதற்கு முன்பாக கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலந்தாய்வில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்றும் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளுக்கான இந்த அட்டவணையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story