டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் - 10 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்!
இந்த போராட்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண்-48இல் இன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் அஹிர் ரெஜிமென்ட் பிரிவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியான குருகிராமில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண்-48இல் இன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சன்யுக்த் அஹிர் ரெஜிமென்ட் மோர்ச்சா என்ற பதாகையின் கீழ், அஹிர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகிகள் தினமான இன்று தேசிய நெடுஞ்சாலையின் ‘கெர்கி தவுலா பகுதியிலிருந்து ‘ஹீரோ ஹோண்டா சவுக்’ பகுதி வரை பேரணி நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். ஏறக்குறைய 4,000 பேர் பேரணியில் பங்கேற்கின்றனர், இதனால் சுங்கச்சாவடி அருகே பெரும் நெரிசல் ஏற்பட்டது.
Haryana | Protestors block the Delhi-Jaipur highway at Kherki toll in Gurugram to support the demand for the creation of 'Ahir Regiment' in the Indian Army. pic.twitter.com/HNiHzyc83Q
— ANI (@ANI) March 23, 2022
மேலும், குருகிராமில் உள்ள கெர்கி சுங்கச்சாவடி பகுதியை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அந்த நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மணிநேரம் போக்குவரத்து தடை செய்யப்படுள்ளது என்று குருகிராம் போலீசார் தெரிவித்தனர். ‘கெர்கி தவுலா பகுதியிலிருந்து ‘ஹீரோ ஹோண்டா சவுக்’ பகுதி வரை முற்றிலும் மூடப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story