12-17 வயதினருக்கு ‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி
12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு ‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து 12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு ‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கி உள்ளது. வெளிநாட்டில் கண்டுபிடித்த இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் பெற்று இருக்கிறது.
‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது. 12 முதல் 17 வயதுக்குட்டவர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் வெற்றி கிடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story