விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் 9 நாட்களில் 40 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதியை எட்டி சாதனை! - மந்திரி பியூஷ் கோயல்


விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் 9 நாட்களில் 40 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதியை எட்டி சாதனை! - மந்திரி பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 23 March 2022 5:17 PM IST (Updated: 23 March 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

‘காஷ்மீர் பைல்ஸ்’ போன்ற திரைப்படமாக இருந்தால், இந்தியாவின் ஏற்றுமதி சாதனையை 'மேக் இன் இந்தியாவின்' பிளாக்பஸ்டர் வெற்றி என்று சொல்லி பெருமைப்படலாம்.

புதுடெல்லி,

2021-22ம் ஆண்டு காலகட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விவசாய பொருட்கள் ஏற்றுமதியை இந்தியா செய்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.அதில், அரிசி (பாசுமதி தவிர), கடல் பொருட்கள், கோதுமை, மசாலா மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட சுமார் 50% அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், “வரலாற்றில் முதன்முறையாக, இந்தியா சரக்கு ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்திருக்கிறது, இதைச் தொடர்ந்து செய்யும் என்ற கூட்டுப் பலத்தை இது காட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷியா-உக்ரைன் போர் போன்ற துன்பங்கள் இருந்தபோதிலும், இது நமது இளம் தொழில்முனைவோர், விவசாயிகளின் திறனைக் காட்டுகிறது.

‘காஷ்மீர் பைல்ஸ்’ போன்ற திரைப்படமாக இருந்திருந்தால், இந்தியாவின் ஏற்றுமதி சாதனையை 'மேக் இன் இந்தியாவின்' பிளாக்பஸ்டர்  வெற்றி என்று சொல்லி பெருமைப்படலாம்” என்றார்.

Next Story