டெல்லி: மைக்ரோவேவ் ஓவனில் 2 மாத பெண் குழந்தையின் சடலம்...!
டெல்லியில் மைக்ரோவேவ் ஓவனில் 2 மாத பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
தெற்கு டெல்லியின் சிராக் தில்லி பகுதியில் 26 வயதான டிம்பிள் என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன் 2 மாத பெண் குழந்தையை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் வந்த போது குழந்தை கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவிக்கவே, விசாரணை துரிதமாக நடந்தது. அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும் இவர்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே குழந்தை உயிரிழந்ததும் உறுதியானது.
அதேநேரம் வீட்டின் முதல் தளத்தில் தாய் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், குழந்தையின் உடல் மைக்ரோவேவ் ஓவனில் கிடந்ததாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். பெண் குழந்தை பிறந்ததை விரும்பாத டிம்பிள் தான் குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் தாயை கைது செய்த போலீசார் தொடர்ந்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு டெல்லியில் மைக்ரோவேவ் ஓவனில் 2 மாத பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story