காசநோய் இல்லாத இந்தியாவை அடைய ஒன்றிணைவோம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி,
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதிமொழிகளையும் நோக்கங்களையும் இந்தியா புதுப்பித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"டாக்டர் ராபர்ட் கோச் 1882-ம் ஆண்டில் காசநோய் பாக்டீரியாவை கண்டுபிடித்ததன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24, அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஆண்டு உலக காசநோய் தினத்தின் கருப்பொருள் "இதுவே நேரம்". இந்த கருப்பொருளுக்கு ஏற்ப, உலகளாவிய இலக்குகளை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது அர்ப்பணிப்புகளையும் நோக்கங்களையும் இந்தியா புதுப்பித்துள்ளது. இது ஒரு லட்சிய காலக்கெடு மேலும், நோயை அகற்றுவதற்கான உந்துதலை நாம் கொடுக்கும் போது, இந்த இலக்கு எட்டக்கூடியதே.
காசநோய் இல்லாத இந்தியாவை அடைய அனைவரும் ஒன்றிணைந்து, நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story