ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் - வைரல் வீடியோ
ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 18 வயது இளைஞனை ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 18 வயது இளைஞனை ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை, தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தைக் கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, (ஜிஆர்பி) பிரிவு ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் நடந்ததுள்ளது.விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பிளாட்பாரத்தில் ஒரு வாலிபர் சுற்றித் திரிவதைக் கண்டு சந்தேகமடைந்த கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே சற்று உஷாராக இருந்தார். அப்போது ரெயில் நெருங்கி வந்த நேரத்தில், திடீரென அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ரெயில் தண்டவாளத்தில் குதித்தார்.
உடனே கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே விரைந்து வந்து, தண்டவாளத்தில் குதித்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டார்.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், மேற்கண்ட விஷயங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Maharashtra: A police personnel saved a teenage boy's life by pushing him away from the railway track just seconds before an express train crossed the spot at Vitthalwadi railway station in Thane district. (23.03)
— ANI (@ANI) March 23, 2022
Video Source: Western Railway pic.twitter.com/uVQmU798Zg
தன் உயிரை பொருட்படுத்தாமல், அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தண்டவாளத்தில் குதித்து வாலிபரை காப்பற்றியதை உதவி போலீஸ் கமிஷனர், விஜய் தரேகா பாராட்டினார்.
இதனை தொடர்ந்து, போலீசார் அந்த இளைஞரை கல்யாண் ரெயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று அவரது பெற்றோரை வரவழைத்தனர். பின்பு அந்த இளைஞருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story