சைக்கிள் பைக்கில் மோதியதால் பஸ் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து நூல் இழையில் தப்பித்த சிறுவன்- பதைபதைக்க வைக்கும் வீடியோ


சைக்கிள் பைக்கில் மோதியதால் பஸ் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து நூல் இழையில் தப்பித்த சிறுவன்- பதைபதைக்க வைக்கும் வீடியோ
x
தினத்தந்தி 24 March 2022 8:10 AM IST (Updated: 24 March 2022 8:10 AM IST)
t-max-icont-min-icon

பயங்கர சாலை விபத்தில் இருந்து சிறுவன் அதிசயமாக உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொருக்காலா,

கேரளா மாநிலத்தில் உள்ளது கண்ணூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா கிராமம். இங்கு கடந்த 2 தினங்களுக்கு முன்  நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் சாலையை கடக்க முயலும் போது பைக்கில் மோதினான்.

பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அதே சமயத்தில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான்.

பேருந்தில் சிக்கிய அவனது மிதிவண்டி சுக்கு நூறானது. அதே நேரத்தில் சிறுவன் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தான். தற்போது இது குறித்து வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story