ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியீடு - திரை முன் கூர்மையான ஆணியால் வேலி போட்ட தியேட்டர் நிர்வாகம்


ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியீடு - திரை முன் கூர்மையான ஆணியால் வேலி போட்ட தியேட்டர் நிர்வாகம்
x
தினத்தந்தி 24 March 2022 11:51 AM IST (Updated: 24 March 2022 11:51 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் திரையரங்கத்தில் திரையின் முன்பு, ரசிகர்கள் அருகே செல்லாத வகையில் ஆணியால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா,

தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை அங்குள்ள ரசிகர்கள் கடவுளாக எண்ணி அவர்களுடைய பேனர், போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்து ஆரவாரம் செய்து முதல் நாள் காட்சியை காண்பர்கள். அப்போது திரையரங்கம் கூட்ட மிகுதியல் நிரம்பி வழியும். 

ரசிகர்கள் உற்சாகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரையை கிழிக்கும் அளவிற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் நடக்கமல் இருப்பதற்காக, ஆந்திராவில் உள்ள சில திரையரங்குகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆந்திராவில் திரையரங்கத்தின் திரையின் முன்பு, ரசிகர்கள் அருகே செல்லாத வகையில் ஆணியால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள வெங்கடேஸ்வரலு அன்னபூர்ணா திரையரங்கில் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.


அதேபோல, ஸ்ரீகாகுளத்தில் உள்ள சூர்யா தியேட்டரில் ஒருபடி மேலே சென்று, திரையின் முன்பு, முள்கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

கடைசியாக ஸ்ரீகாகுளத்தில் உள்ள சூர்யா தியேட்டரில் புஷ்பா திரையிடப்பட்ட போது, நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களால் தியேட்டர்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது, இதனால் திரை சேதமடைந்தது. சூர்யா தியேட்டரில் மீண்டும் இதுபோன்ற குழப்பம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே தான் முனேச்ஸ்ரீக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திரையரங்க நிர்வகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


சூர்யா திரையரங்கின் பொறுப்பாளர் கூறுகையில், "இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிக்கப் போகிறார்கள், தியேட்டர் முழுவதும் மிகவும் குழப்பமாக இருக்கும்." எனவே, மக்கள் திரைக்கு மிக அருகில் வருவதைத் தடுக்க, ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக, கம்பிகள் மற்றும் வேலிகள் போடப்பட்டுள்ளன” என்றார்.

இதை போலவே, நாளை வெளியாக உள்ள ‘ஆர்ஆர்ஆர்’ பட வெளியீட்டுக்கு முன்னதாக, 'வெங்கடேஸ்வரலு அன்னபூர்ணா தியேட்டர் நிர்வாகம், பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த திரையின் முன், ஆணி வேலி அமைத்துள்ளது.


இதுகுறித்து அந்த  தியேட்டர் பொறுப்பாளர்  கூறுகையில், "மக்கள் உற்சாகமடையலாம், மேடையில் ஏறலாம், இது திரையை சேதப்படுத்தும் என்பதால் நாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.

Next Story