ஓடிடி தளத்தின் மாதாந்திர சந்தாவை புதுப்பித்து தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!!


ஓடிடி தளத்தின் மாதாந்திர சந்தாவை புதுப்பித்து தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!!
x
தினத்தந்தி 24 March 2022 1:04 PM IST (Updated: 24 March 2022 1:04 PM IST)
t-max-icont-min-icon

ஓடிடி தளத்தின் மாதாந்திர சந்தாவைப் புதுப்பித்து தருவதாக கூறி நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் விக்ரம். இவர் பிரபல ஓடிடி தளத்தில் மாத சந்தா செலுத்தி திரைப்படங்கள் பார்த்து வந்துள்ளார். இவரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விக்ரமின் ஓடிடி தள சந்தாவை நீட்டிக்க முன்கூட்டியே பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். 

அதனை புதுப்பிக்க அவருக்கு ஒரு இணைய லிங்கையும் அவர் அனுப்பியுள்ளார். இதனை உண்மை என நம்பிய விக்ரம் அந்த லிங்கிற்குள் சென்று தனது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்துள்ளார். அவர் விவரங்ககளை கொடுத்த சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1.22 லட்சம் திருடுபோனது அவருக்கு தெரியவந்துள்ளது.

தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். விக்ரம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனே அந்த வங்கியைத் தொடர்பு கொண்டு அவரது கணக்கின் பரிவர்த்தனைகளை முடக்கினார். 

அதன் பின்னர் விரைவில் அந்தத் தொகை மீட்கப்பட்டு  விக்ரமின்  வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story