காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் 5-6 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது; பியூஷ் கோயல்
கடந்த காலங்களில் குறுகிய கால நன்மைகளுக்காக, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
“உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2008ல் ஏற்பட்டபோது, அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நமது பொருளாதாரத்தை 5-6 ஆண்டுகள் பின்தங்கச் சென்றது.
குறுகிய கால ஆதாயங்கள் நீண்டகால வலிக்கு வழிவகுக்கும் என்பதால் பிரதமர் மோடி குறுகிய கால ஆதாயங்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
ஆனால், கடந்த காலங்களில் குறுகிய கால நன்மைகளுக்காக, தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட சில நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.
நாட்டில் பெரும்பாலான தயாரிப்புகளின் அளவு அதிகரித்துள்ளது. மேலும், பெரும்பாலான பொருட்களின் மதிப்பும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, மோட்டார் வாகனங்களில் 50%, அரிசியில் 40%, கையால் செய்யப்பட்ட தரைவிரிப்புகளில் 20%, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் 12-15%, பருப்பு வகைகளில் 25% அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
'ஸ்டார்ட்அப் இந்தியா' 2016 இல் தொடங்கப்பட்டது. இன்று, இளைஞர்கள் புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் தொடக்கநிலை நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பை உலகில் 3வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், 90க்கும் மேற்பட்ட தன்னிச்சையான தொடக்கநிலை நிறுவனங்கள் உட்பட 65,000 தொடக்கநிலை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.”
இவ்வாறு மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story