சென்னை ஐகோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 March 2022 11:42 AM GMT (Updated: 2022-03-24T17:12:23+05:30)

சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டிற்கு கூடுதலாக இரு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞர்களாக இருந்து வந்த 6 பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பரிந்துரைத்து இருந்த நிலையில், ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். 

வழக்கறிஞர்களாக இருந்து வந்த மாலா மற்றும் சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதுடன், காலியிடங்களும் 14 ஆக குறைந்துள்ளது. 


Next Story