அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும்: ஏர்பஸ்


image credit: airbus.com
x
image credit: airbus.com
தினத்தந்தி 24 March 2022 8:49 PM IST (Updated: 24 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

2040 ஆம் ஆண்டில் இந்தியாவில் விமான பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு 6.2% ஆக உயரும் என்று ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஐதராபாத்,

இந்திய விமான நிறுவனங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 1,770 புதிய சிறிய விமானங்களும், 440 நடுத்தர மற்றும் பெரிய விமானங்களும் தேவைப்படும் என்று பிரெஞ்சு ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஏர்பஸ் தெரிவித்துள்ளது.

"அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக வளரும், மேலும் வளர்ந்து வரும் நடுத்தரவாசிகள் விமானப்பயணத்திற்கு ஆர்வம் காட்டுவார்கள். இதன் விளைவாக 2040 ஆம் ஆண்டில் இந்தியாவில் விமாண பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு 6.2% ஆக உயரும்" என்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஏர்பஸ் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ஏர்பஸ்-ன் தரவுகளின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 34,000 புதிய விமானிகள் மற்றும் 45,000 புதிய விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 

ஏர் இந்தியாவிற்கு புதிய ஏ350 விமானங்களை வழங்குவதற்காக டாடா குழுமத்துடன் ஏர்பஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story