பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் இல்லை - மத்திய இணை மந்திரி
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் இல்லை என்று மத்திய இணை மந்தரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் இணை மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்தப் பதிலில் அவர், மத்திய அரசுப் பணியில் கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story