பெட்ரோல், டீசல், கியாசை தொடர்ந்து சி.என்.ஜி. எரிவாயு விலை உயர்வு
பெட்ரோல், டீசல், கியாசை தொடர்ந்து சி.என்.ஜி. எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, டெல்லி அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சி.என்.ஜி. மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சி.என்.ஜி.யை சில்லரையாக வினியோகிக்கும் இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம், அதன் விலையை கிலோ ரூ.58.01-ல் இருந்து ரூ.59.01-ஆக உயர்த்தி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சி.என்.ஜி. விலை 3 தடவை உயர்த்தப்பட்டுள்ளது. குழாய் வழி சமையல் எரிவாயு விலை, கனமீட்டருக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story