மக்களை பற்றி பிரதமருக்கு கவலை இல்லை..!! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2022 12:40 AM IST (Updated: 25 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் மற்றும் மக்களை பற்றி பிரதமருக்கு கவலை இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா காரணமாக வருமானத்தை இழந்ததால் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதா? இல்லை. ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைத்ததா? இல்லை. சிறு தொழில்கள் மூழ்காமல் காப்பாற்றப்பட்டதா? இல்லை. ஆனால், பிரதமர் இவை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story