கொரோனா இறப்பு போலி சான்றிதழ் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2022 4:14 AM IST (Updated: 25 March 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா இறப்பு போலி சான்றிதழ் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா இறப்பு நிவாரணம் கோரி வழங்கப்பட்ட சான்றிதழ்களில் 5 சதவீதம் விசாரணைக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

கொரோனாவால் மார்ச் 28-ந் தேதி வரை இறந்தவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகு கொரோனாவால் இறப்பவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் காலம் 90 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவித்தனர்.

Next Story