கோவா சட்டசபை மார்ச் 29-ம் தேதி கூடுகிறது


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 25 March 2022 5:09 AM IST (Updated: 25 March 2022 5:09 AM IST)
t-max-icont-min-icon

கோவா சட்டசபை மார்ச் 29-ம் தேதி கூடுகிறது.

பானஜி,

கோவா சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 29-ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் கணேஷ் கவுங்கர் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கூடும். கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்று ஒரு நாள் கழித்து இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மார்ச் 28-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

Next Story