இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,938-ஐ விட சற்று குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 499 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 087 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story