சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை...


சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை...
x
தினத்தந்தி 25 March 2022 11:57 AM IST (Updated: 25 March 2022 11:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடனே தொடங்கியது.

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில நாள்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்குச்சந்தை புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 111.14 புள்ளிகள் சரிந்து 57,484.54 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 18.25 புள்ளிகள் சரிந்து 17,204.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

Next Story