கோவில் திரு விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்: போட்டி போட்டு வாங்கிய மதுபிரியர்கள்


(Image Credit:  Deccan Herald)
x
(Image Credit: Deccan Herald)
தினத்தந்தி 25 March 2022 12:19 PM IST (Updated: 25 March 2022 12:19 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் பாபா ரோட் ஷா கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம்,  அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போமா கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் நடைபெறும் திருவிழாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதமாக' மதுபானம் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாத மதுவை வாங்கி குடிக்கும் வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Next Story