அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் 10.7 சதவீதம் உயருகிறது..!
அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் 10.7 சதவீதம் உயர உள்ளது.
புதுடெல்லி,
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் 10 சதவீதத்திற்கு மேல் உயர உள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலையில் 10.7 சதவீத விலை உயர்வை அரசு அனுமதித்துள்ளது.
இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7 சதவீத விலை உயர்வை அனுமதித்துள்ளது. இதுவே அனுமதிக்கபட்ட அதிகபட்ச விலை உயர்வாகும். இதனால் தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் முதல் உயரும்.
தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில், பாராசிட்டாமல் போன்ற மருந்துகள், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அடங்கும்.
கொரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story