சபர்மதி ஆசிரம விவகாரம்: காந்தியின் கொள்ளுப்பேரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


சபர்மதி ஆசிரம விவகாரம்: காந்தியின் கொள்ளுப்பேரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 26 March 2022 4:44 AM GMT (Updated: 26 March 2022 4:44 AM GMT)

சபர்மதி ஆசிரம மறுமேம்பாட்டு திட்டத்துக்கு எதிராக காந்தியின் கொள்ளுப்பேரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி, 

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை ரூ.1,200 கோடி செலவில் மறுமேம்பாடு செய்ய குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் சபர்மதி ஆசிரமம் உள்கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, காந்திஜியின் தத்துவங்களில் ஒன்றாக உள்ள கலங்கமற்ற எளிமையின் அடையாளம் சிதைக்கப்படும் என தெரிவித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் அருண் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 25-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக துஷார் அருண் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி நேற்று முறையிட்டார்.

முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Next Story