எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு


எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 26 March 2022 2:54 PM IST (Updated: 26 March 2022 2:54 PM IST)
t-max-icont-min-icon

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சென்னை,

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 4-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல் இருந்து, 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு உயர்ந்திருந்தது.

அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சிறிய அளவில் விலை மாற்றம் கண்டு, அதன்பின்னர் 66 நாட்கள் மாற்றம் இல்லாமல் இருந்து, கடந்த 22-ந்தேதி விலை அதிகரித்தது. கடந்த 22, 23 மற்றும் 25-ந்தேதிகளில் ஏற்பட்ட விலை உயர்வால், அந்த 3 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 03 காசும், டீசல் 3 ரூபாய் 04 காசும் அதிகரித்துள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தே காணப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விலை உயர்வின் தாக்கம் பிற அத்தியாவசிய பொருட்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் தொடர்ந்து எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

Next Story