காதலுக்கு எதிர்ப்பு - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை...!


காதலுக்கு எதிர்ப்பு - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை...!
x
தினத்தந்தி 26 March 2022 8:45 PM IST (Updated: 26 March 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி அருகே பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் கே.வி.பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தய்யா. இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில் 2-வது மகள் விஷ்ணுபிரியா(வயது 16) திருப்பதியில் உள்ள பத்மாவதி கல்லூரி விடுதியில் தங்கி இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி விஷ்ணுபிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவர, ஆத்திரம் அடைந்த அவர்கள் விஷ்ணு பிரியாவை கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி விஷ்ணு பிரியா இன்று மாலை கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி விஷ்ணு பிரியா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், இது குறித்து விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி விஷ்ணுபிரியா காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story